மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு வருந்துகிறேன்: பிரபல நடிகை

வியாழன், 8 மார்ச் 2018 (15:14 IST)
இன்று உலகம் முழுவதும் மகளிர் தினத்தை பெண்கள் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் தமிழகம் மட்டும் ஒரு கர்ப்பிணி பெண்ணின் உயிரை அநியாயமாக இழந்துள்ளது. ஒரு காவல்துறை ஆய்வாளரின் மோசமான செயல் ஒரு குடும்பத்தையே கதிகலங்க வைத்துள்ளது.

ஒரு கர்ப்பிணி பெண்ணை காவு கொடுத்துவிட்டு எப்படி மகளிர் தினம் கொண்டாட முடியும் என்று பெரும்பாலான பெண்கள் மகளிர் தினத்தை கொண்டாடுவதை தவிர்த்து வருகின்ற்னர். இன்றைய தினம் தங்களுக்கு துக்க தினம் என்று பல பெண்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான அதுல்யாரவி, தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: திருச்சியில் ஒரு கர்ப்பிணி பெண்ணை கொன்றதில் இருந்து தொடங்குகிறது தமிழகத்தின் பெண்கள்தினம். மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு வருந்துகிறேன்' என்று பதிவு செய்துள்ளார்.
 

திருச்சியில் ஒரு கர்பிணி பெண்ணை கொன்றதில் இருந்து தொடங்குகிறது தமிழகத்தின் #பெண்கள்தினம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்