இதனையடுத்து சம்மன் அனுப்பிய காவல்துறையினர் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் நேற்று 3 மணி நேரமாக விசாரணை செய்தனர். மேலும் பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை கெளரி கிஷன் தனது டுவிட்டர் பக்கத்தில், ''பத்மா சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் நான் அடையாறில் படித்துக் கொண்டிருந்த போது நடந்தது எனத் தெரிவித்துள்ளார்., அதில், சாதிக் கொடுமை, உடலை வைத்து தவறாக சித்தரிப்பது, மாணவர்கள் மீது பழிபோடுவது போன்ற செயல்களை இப்போது நினைத்தாலும் மனசு பாரமாகிறது ''எனத் தெரிவித்துள்ளார். இவருக்கு ஆதரவாக பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறது.