"விஜய் இறந்துவிட்டதாக செய்தி பரப்பிய அஜித் ரசிகர்கள்" - கொந்தளித்த பிகில் பட தயாரிப்பாளர்!

செவ்வாய், 30 ஜூலை 2019 (11:17 IST)
தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக இரண்டு வகையாக பிரிக்கலாம் அதில் ஒன்று அஜித் ரசிகர்கள் மற்றொன்று விஜய் ரசிகர்கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கேலி செய்து அடித்துக்கொள்வார்கள். 


 
அந்த வகையில் அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள நேர்கொண்ட ப்பார்வை படத்திற்கு போட்டியாக இப்போதே விஜய் ரசிகர்கள் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். அந்தவகையில் நேற்றிரவு விஜய் ரசிகர்கள்,  நேர்கொண்ட பார்வையின் ரிலீஸ் தேதியை குறிக்கும் வகையில் #ஆகஸ்ட்8பாடைகட்டு என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தனர். 
 
பின்னர் இதற்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் இன்று காலை #RIPactorVIJAY என்ற டாக்கை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். இது விஜய் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்ககள் பலரையும் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி அடையவைத்தது.    


 
இந்நிலையில் தற்போது பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி எல்லா விதத்திலும்  நல்லவராக நடந்துகொண்டு ஒரு மில்லியன் இதயங்களை வென்றுள்ளார் என்று கூறி #LongliveVIJAY என்ற ஹாஸ்டேக்கை மென்சன் செய்து பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்