விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டிஎன்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்போது ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து அனிமல் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.
இந்நிலையில் ஓடிடியில் வெளியாகும் திரையரங்க வெளியீட்டின் போது இடம்பெறாத காட்சிகளும் இடம்பெறும் என இயக்குனர் சந்தீப் தெரிவித்துள்ளார். திரையரங்க வெளியீட்டில் 3 மணி நேரம் 21 நிமிடம் ஓடும் படமாக அனிமல் இருந்தது. ஓடிடி வெளியீட்டில் கூடுதலாக 8 நிமிடக் காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணிநேரம் 29 நிமிடம் ஓடும் காட்சிகளாக இடம்பெறும் என சொல்லப்பட்டுள்ளது.