அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் ‘கிஃப்’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

புதன், 5 ஜூலை 2023 (13:08 IST)
நேரம், பிரேமம் மற்றும் கோல்ட்  ஆகிய படங்களுக்கு அடுத்து அல்போன்ஸ் புத்ரன் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக தொடங்கி நடந்து வரும் நிலையில் இப்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்ப்ட்டுள்ளது. படத்துக்கு கிஃப்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் இளையராஜா இசையில் 7 பாடல்கள் இடம்பெறும் என போஸ்டரிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று போஸ்டர் வெளியான நிலையில் இன்று இந்த படத்தின்  இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்