மேலும் அந்த ட்வீட்டில் “எனக்கென்னவோ ஆண்டவரின் பெஸ்ட் ஃபேன்பாய் இயக்குனர் யார் என்ற சண்டையில் முதலிடம் பிடித்தது கௌதம் மேனன் சார்தான் என்று நினைக்கிறேன்.” எனக் கூறி அதில் லோகேஷை டேக் செய்திருந்தார். இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த இயக்குனர் லோகேஷ் “சந்தேகமே வேண்டாம் கண்டிப்பார் கௌதம் மேனன் சார்தான்” எனக் கூறியிருந்தார்.
லோகேஷின் இந்த கமெண்ட்டுக்கு பதிலளித்த கௌதம் மேனன் “ஒருகாலத்தில் நான் இருந்தேன். ஆனால் உங்களுடைய விக்ரம் படம் வரும் வரை. இப்போது போட்டி கடினமாகி விட்டது. இப்போது நான் மேலும் முயற்சி செய்து அதைத் தாண்டி செல்லவேண்டும். அது ஒரு நல்ல சவாலாக இருக்கும். ஆனா இந்த சண்டையில சட்ட கிழியாது. அன்பு மட்டுமே” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.