தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் ஆகிய நான்கே படங்களின் மூலம் முன்னணி இயக்குனர் ஆகியுள்ளார் நெல்சன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் உடனடியாக ஜெயிலர் 2 உருவாகும் என தகவல்கள் பரவின.
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தை முடித்த பின்னர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இருவரும் சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திப்பின் போது நெல்சன் சொன்ன கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்துள்ளதால் மேற்படி வேலைகளை ஆரம்பிக்க சொல்லி அவர் கேட்டுக்கொண்டுள்ளாரம்.