அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, தபு மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது அலா வைகுந்தபுரம்லு. கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் மழை பொழிந்தது. தெலுங்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களும் தெலுங்கு வடிவத்திலேயே பார்த்து ரசித்தனர். அதனால் அந்த படத்தை தமிழில் டப் செய்து வைகுந்தபுரம் என்று வெளியிட்டது சன் தொலைக்காட்சி. ஆனால் எதிர்பார்த்த அளவை விட இந்த படம் மிகப்பெரிய ரசிகர்களால் அந்த படம் பார்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். அதில் அல்லு அர்ஜுன் வேடத்தில் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிக்க உள்ளார். தபு கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. தெலுங்கில் தயாரித்த அல்லு அரவிந்தே இந்த படத்தை இந்தியிலும் தயாரிக்கிறார்.