கடந்த பல ஆண்டுகளாகவே அஜித்குமாரை “தல” என்றே குறிப்பிட்டு வரும் அஜித் ரசிகர்கள், ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் “தல” என்ற அடைமொழியையே ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அஜித்குமார்.
அதில் “மதிப்பிற்குரிய ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு.. என்னை பற்றி ஏதாவது எழுதும்போது எனது பெயரை அஜித், அஜித்குமார் அல்லது ஏ.கே என்று குறிப்பிடுங்கள். எனது பெயர் முன்னால் “தல” போன்ற வார்த்தைகளை சேர்க்க வேண்டாம். உங்கள் அனைவரது வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், மன அமைதியும் நிலவட்டும்” என தெரிவித்துள்ளார். அஜித்தின் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.