அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் நடைபெறும் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்துகொள்வார் என்றும் இதற்காக அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது