இந்த படப்பிடிப்பில் பைக் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அப்போது நிலைதடுமாறிய அஜித் கீழே விழுந்ததால் தோள்பட்டை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த காயத்தால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்கு தேவை இருக்காது என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் மருத்துவர்கள் அஜித் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் திங்கள் முதல் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருப்பதாகவும், வரும் புதன்கிழமை முதல் அஜித் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் அதற்குள் அவர் முற்றிலும் குணமாகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.