ரிலீஸ் ஆனது வலிமை திரைப்படம்: முதல் காட்சியில் ரசிகர்கள் உற்சாகம்!
வியாழன், 24 பிப்ரவரி 2022 (05:12 IST)
அஜித் நடித்த வலிமை திரைப்படம் இன்று காலை 4 மணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது. முதல் காட்சியை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில நகரங்களில் மட்டும் 4 மணி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சில நகரங்களில் 7 மணிக்கும் ஒரு சில நகரங்களில் 10 மணிக்கு முதல் காட்சி ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் வெளிநாடுகளிலும் இந்திய நேரப்படி 4 மணிக்கு காட்சிகள் தொடங்கி விட்டதாகவும் படத்தை பார்த்து ரசித்து வருவதாகவும் ரசிகர்கள் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளன
இரண்டு வருடங்களுக்கு மேலாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு இன்று திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மிகுந்த சந்தோசத்துடன் அவர்கள் படத்தை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது