அஜித்தின் ‘துணிவு’ ரிலீஸ் தேதி எப்போது? படகுழுவினர் தந்த தகவல்!
வியாழன், 6 அக்டோபர் 2022 (16:13 IST)
அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தாய்லாந்தில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகப்போகிறதா? அல்லது ஏப்ரல் மாதம் ரிலீசாக போகிறதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது
இந்த நிலையில் தாய்லாந்து படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னை திரும்பும் படக்குழுவினர் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இம்மாத இறுதியில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
அஜித் மஞ்சுவாரியர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது