ஓடிடிக்கு செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்: எதிர்பாராத தொகை கிடைத்ததால் தயாரிப்பாளருக்கு ஜாக்பாட்

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (08:09 IST)
தமிழ் உள்பட பெரும்பாலான மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படங்கள் அனைத்தும் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருவது தெரிந்தது. அந்த வகையில் சமீபத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று விஷாலின் சக்ரா உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன 
 
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 25வது திரைப்படமான ’பூமிகா’ என்ற திரைப்படமும் ஓடிடியில்  ரிலீசாக பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இந்த படத்தின் தயாரிப்பு செலவு ரூபாய் 5 கோடி என்ற நிலையில் 12 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும், இந்த படத்தின் கண்டெண்ட் புதுமையாக இருந்ததால் இந்த படத்திற்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்திருப்பதாகவும், இது உண்மையில் தயாரிப்பாளருக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் என்றும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய 25வது படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் விரும்பியதாகவும் ஆனால் காலமும் சந்தர்ப்ப சூழ் நிலையும் அதற்கு ஒத்து வரவில்லை என்பதால் வேறு வழியின்றி ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது 
 
தொடர்ச்சியாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா உள்பட நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்