தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுடன் மோதும் ஐஸ்வர்யா ரஜினி!

வெள்ளி, 10 நவம்பர் 2023 (20:30 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  தனுஷ்.  இவர் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்   இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு  வெளியாகும் என்று சத்யஜோதி பிலிம்ஸ்  நேற்று அறிவித்தது.

அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்ததால் தனுஷ், சிவகார்த்திகேயன்  நேருக்கு  நேர் மோதவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த  நிலையில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள படம்  லால் சலாம். இப்படமும் வரும் பொங்களுக்கு பான் இந்திய படமாக வெளியாகவுள்ளதாக இன்று லைகா அறிவித்துள்ளது.

எனவே தனுஷ்( கேப்டன் மில்லர்), சிவகார்த்திகேயனின்( அயலான்)  படங்களுடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் படமும் மோதவுள்ளதால்  ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்