இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் சிங்கப்பூர் தொழிலதிபர் கணவருடன் உலகம் முழுவதும் சுற்றி வரும் செலினா, தற்போது ஆஸ்திரியாவில் இருக்கின்றாராம். எப்போது வேண்டுமானாலும் குழந்தைகள் பிறக்கலாம் என்ற நிலையில் சமீபத்தில் பாத்டேப்பில் நிர்வாண நிலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை செலீனா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விளக்கமளித்தபோது, 'கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் உடலை நினைத்து பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் தங்களுக்குள் இன்னொரு உயிர் வளர்கிறது. அதனால் எந்த போஸில் இருந்தாலும் பெண்கள் வெட்கப்படக் கூடாது என்று செலினா தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி கிடைத்து வருகிறது.