நடிகை நமீதாவின் திருமணம்: பிக்பாஸ் ரைசா வெளியிட்ட வீடியோ
வெள்ளி, 10 நவம்பர் 2017 (10:28 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை நமீதாவை நடிகர் சரத்குமாரை திருமணம் செய்யவுள்ளதாக வதந்தி கிளம்பியது. ஆனால் இது வதந்திதான் என்று இருவருமே ஊடகங்களில் விளக்கம் அளித்தனர்
இந்த நிலையில் பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவரும், நமீதாவின் நெருங்கிய தோழியுமான ரைசா இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமீதாவே தான் வீரா என்பவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் விரைவில் திருமண தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்
நடிகை நமீதா கடந்த சில வருடங்களாகவே வீராவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. வருங்கால தம்பதிகளுக்கு ரைசாவும் அவரது தோழிகளும் வாழ்த்து கூறியதும் அந்த வீடியோவில் உள்ளது.