இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
இவரது முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொணடர். அழகான மறுவாழ்வை தனது கணவருடன் துவங்கியிருக்கும் மைனா நந்தினி தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த மகிழ்ச்சியாக செய்தியை கேட்டு அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.