கடந்த 1974ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஜோசப் விஜய். இவரை எஸ்.ஏ. சி எப்படியாவது மருத்துவர் ஆக்கிவிட வேண்டும் என கனவு கண்டார். ஆனால், விஜய்யோ தான் சினமாவில் எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்ற கணவில் இருந்தார். இதனால் எஸ்.ஏ. சி, விஜய்யை ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தில் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து தோல்விகள் , அவமானங்கள், கேலி , கிண்டல் என எல்லா இன்னல்களுக்கு இடையிலும் சாதிக்கவேண்டும் என்ற வெறியுடன் வெற்றியை நோக்கி பாய்ந்த விஜய் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் இளைஞர்கள் கொண்டாடும் நாயகனாக விஜய்யை மாற்றினார். அதையடுத்து விஜய்யின் திரையுலக பயணத்திற்கு மைல் கல் அமைந்தது ‘காதலுக்கு மரியாதை’ படம்.
பின்னர் தோல்வி - வெற்றி என மாறிமாறி படங்களை கொடுத்து வந்த விஜய் இனளய தளபதியாக உருவெடுத்து இன்று தளபதியாக வளர்ந்து இறக்கிறார். வருகிற ஜூன் 22ம் தேதி தனது 46வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இந்நிலையில் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. ஆனால் விஜய் ரசிகர்கள் #1MonthForVijayBdayBash என்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். இதுவரை இந்த ஹேஷ்டேக்கில் சுமார் 2 மில்லியன் ட்விட் வந்துவிட்டது.