13 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாடல் நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவரது தாயாரும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மற்றும் சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இந்த விவகாரம் அதிக அளவில் விவாதிக்கப்படவே, பிரபலங்கள் மற்றும் விஐபிக்களிடம் பாலியல் தொல்லைகளை அனுபவித்ததாக பல பெண்கள், சின்மயியிடம் கூறி வருகின்றனர். அவர்களின் பெயரை மறைத்துவிட்டு அந்த பெண்களின் பதிவுகளை சின்மயி டிவிட்டரில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சின்மயிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் “ சின்மயி, ராகுல் உங்கள் இருவரையும் 10 வருடங்களாக எனக்கு தெரியும். நீங்கள் உண்மையானவர்கள். இதுதான் நான் நட்பு பலப்படுத்தியுள்ளது. உங்களை நேசிக்கிறேன். நீங்கள் கூறுவது உண்மைதான்” என பதிவிட்டுள்ளார்.