தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர்,. ராஜமெளலி இயக்கத்தில் உருவான பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். அதன்பின்னர், இந்தியா முழுவதும் அவர் பிரபலமானார்.
ஆனால், பாகுபலி படத்திற்குப் பின் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், தற்போது ஆதிபுரூஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பிரபாஸ் திருப்பதி கோயிலுக்கு சென்று, அதிகாலை சுப்ரபாத ஏழுமலையானை வழிபட்டார். அதன்பின்னர், சாமி கும்பிவிட்டு வெளியே வந்த அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்களுக்கு கை அசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.