தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் 45 ஆவது பிறந்தநாள் இன்று தெலுங்கு சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். மகேஷ் பாபு நடித்த ஒக்கடு மற்றும் போக்கிரி ஆகிய படங்களை விஜய் ரீமேக் செய்து நடித்து தனது சினிமா கேரியரை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்தினார்.
இதையடுத்து தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக செடி ஒன்றை நட்டு ‘எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இதை நடிகர்கள் விஜய், ஜூனியர் என்டிஆர், நடிகை ஷ்ருதிஹாசன் ஆகியோர் இந்த சங்கிலியைத் தொடர வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.