மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் சென்னையில் ஒருசில திரையரங்குகளில் 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிம்பு மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் ஐந்து மணி காட்சிக்கு விறுவிறுப்பாக முன்பதிவு செய்ததால் ஐந்து மணி காட்சியின் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது.