இரட்டைக்குழல் துப்பாக்கி

வியாழன், 4 ஜூலை 2013 (18:07 IST)
பாலு ஆனந்த் இயக்கியிருக்கும் படம் சந்தித்ததும் சிந்தித்ததும். மகாராஜபடத்தில் நடித்த சத்யா ஹீரோ, டெல்லி மாடல் யுதாஷா ஹீரோயின்.
FILE

படத்தின் கதை எப்படிப்பட்டது என்று பாலு ஆனந்த் விளக்கம் தந்தார். நாம் நினைக்கும் விஷயங்கள் நடக்காமல் போகும். நாம் எதிர்பாராத விஷயங்கள் திடுமென நடக்கும். இந்தப் பின்னணியில் நடக்கும் ஒரு நிகழ்வை படமாக்கியிருக்கிறாராம்.

யுதாஷா டெல்லி மாடல் என்பதால் பஞ்சத்தில் அடிபட்டவரைப் போல் காணப்படுகிறார். சைஸ் ஸீரோவின் முதல்படி போலிருக்கிறது தோற்றம்.

அதற்கு வட்டியும் முதலுமாக இரண்டு குத்தாட்ட நடிகைகளை ஒரு பாடலில் ஹீரோ சத்யாவுடன் ஆடவிட்டிருக்கிறார். இரண்டு பேரும் சிரபுஞ்சியில் செழித்து வளர்ந்தவர்களைப் போலிருக்கிறார்கள்.
FILE

படத்தின் கேமராமேன் இவர்களுக்கு பிரேம் வைக்க அதிகம் சிந்தித்திருப்பார் என்பது படங்களை பார்த்தாலே தெ‌ரிகிறது. இந்த இரட்டைக்குழல் துப்பாக்கிதான் ரசிகர்களை திரையரங்குக்கு அழைக்கும் ஆயுதம் என்பதும் பு‌ரிகிறது.

சென்சா‌ரின் கத்தி‌ரிக்கு இரையாகாமல் இருக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்