ஆஸ்ட்ரேலியா 169/7 (20 ஓவர்)

ஓவலில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் சி-பிரிவு ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

வாட்சன், கிளார்க், பாண்டிங் ஆகியோர் விக்கெட்டுகளை 15 ரன்களில் இழந்த ஆஸ்ட்ரேலியா பிராட் ஹேடின், டேவிட் வார்னர் மூலம் 8 ஓவர்களில் 66 ரன்களை சேர்த்தது. இதில் ஹேடின் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 24 ரன்களை எடுத்தார்.

டேவிட் வார்னர் 53 பந்துகளில் 6 பவுண்டரிகளையும் பிடல் எட்வர்ட்ஸ் பந்தில் பயங்கரமான புல் ஷாட் சிக்சரையும் அடித்து 63 ரன்களை விளாசினார்.

வார்னர் ஆட்டமிழந்த பிறகு அதிரடி சகோதரர்கள் டேவிட் மற்றும் மைக் ஹஸ்ஸி இணைந்தனர். இவர்கள் இருவரும் 14 பந்துகளில் 30 ரன்களை விளாசினர். ஹஸ்ஸி 16 பந்துகளை சந்தித்து 3 மிகப்பெரிய சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மைக் ஹஸ்ஸி 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜான்சன் தன் பங்கிற்கு 9 ரன்கள் சேர்த்தார்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் டெய்லர், எட்வர்ட்ஸ், பிராவோ தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். போலார்ட் ஒரு விக்கெட்டை சாய்த்தார்.

இடைவேளைக்கு பிறகு 170 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு மேற்கிந்திய அணி களமிறங்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்