லண்டன் ஒலிம்பிக் 200மீ ஆடவர் மெட்லி நீச்சலில் அமெரிக்க தங்க மகன் பெல்ப்ஸ் தங்கம் வென்று ஒலிம்பிக்கில் தனது தங்கப்பதக்க எண்ணிக்கையை 16ஆக உயர்த்தினார். மேலும் அவரது ஒலிம்பிக் மொத்த பதக்க எண்ணிக்கை 20ஆக் அதிகரித்துள்ளது.
சக வீரர் லோக்டே வெள்ளி வென்றார். லோக்டே 200மீ பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் வெண்கலம் வென்றார். 200மீ மெட்லியில் ஹங்கேரி வீரர் லாஸ்லோ சீசே வெண்கலம் வென்றார்.
200மீ பேக் ஸ்ட்ரோக்கில் டைலர் கிளேரி தங்கம் வென்றார். 200மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் அமெரிக்காவின் ரெபெக்கா சோனி தங்கம் வென்றார்.