லண்டன் செஸ்: கிராம்னிக் சாம்பியன்; ஆனந்த் 5வது இடம்

செவ்வாய், 13 டிசம்பர் 2011 (13:31 IST)
லண்டன் செஸ் போட்டித் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் இங்கிலாந்து வீரர் லுக் மெக்சேன் என்பவருடன் டிரா செய்ததால் கடைசியில் 5வது இடத்தில் முடிந்தார்.

பில்போ மற்றும் தாஜ் நினைவு செஸ் தொடருக்குப் பிறகு ஆனந்திற்கு இது ஒரு சாதாரணமான தொடராக அமைந்தது.

ஆர்மீனிய வீரர் லெவோன் அரோனியனுக்கு எதிராக ரஷ்ய வீரர் கிராம்னிக் டிரா செய்த போதிலும் சாம்பியன் பட்டம் வென்றார்.

அருமையாக விளையாடிய அமெரிக்க வீரர் நகமுரா 2வது இடம் பெற்றார். கிராம்னிக்கைக் காட்டிலும் ஒரேயொரு புள்ளிதான் பிந்தங்கினார் நகமுரா.

வெப்துனியாவைப் படிக்கவும்