பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனா வீரர் யுவான் மொனாகோவை வீழ்த்தி தனது டென்னிஸ் வாழ்க்கையில் 800வது வெற்றியைப் பதிவு செய்தார்.
இதன் மூலம் இவர் இதற்கு முன்பு 800 போட்டிகளில் வெற்றி பெற்ற மற்ற 6 வீரர்களுடன் இணைகிறார்.
யுவான் மோனாகோவை 6- 3, 7- 5 என்று வீழ்த்திய ரோஜர் பெடரர் இன்று அரையிறுதிய்ல் டொமாஸ் பெர்டிச்சை சந்திக்கிறார்.
பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரேயை டொமாஸ் பெர்டிச் 4- 6, 7- 6, 6- 4 என்ற செட்களில் போராடி வீழ்த்தி அரையிறுதியில் பெடரருடன் மோதவுள்ளார்.
நேற்று தனது 7வது ஏஸ் சர்வை அடித்து பெடரர் 800வது வெற்றியைப் பெற்றார்.
மற்றொரு வீரர் ஜோகோவிச் தோள்பட்டை காயம் காரணமாக விலகியதால் பிரான்ஸ் வீரர் வில்ப்ரெட் சொங்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.