2011ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி?

செவ்வாய், 1 நவம்பர் 2011 (17:14 IST)
FILE
இதற்கு முன்னர் உலகக் கால்பந்து கூட்டமைப்பின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் என்று அர்ஜென்டீனாவின் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார், தற்போது 23 வீரர்களில் மெஸ்ஸி பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதால் அவர் 3வது முறையும் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஸ்பானிய லீக் போட்டிகளிலிருந்து 8 வீரர்கள் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதில் மெஸ்ஸியும் ஒருவர்.

ஸ்பானிய லீகின் மற்றொரு அணியான ரியால் மேட்ரிட் அணி கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட 5 வீரர்களை பரிந்துரை செய்துள்ளது.

உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் அணியிலிருந்து 7 வீரர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். ஜெர்மனி 3 வீரர்களை பரிந்துரை செய்துள்ளது.

கோப்பா அமெரிக்கா சாம்பியன்களான உருகுவே டீகோ ஃபோர்லானை பரிந்துரை செய்துள்ளது. தவிரவும் லிவர்பூல் அணிக்கு ஆடும் உருகுவே வீரர் சுவாரேசும் பட்டியலில் உள்ளார். பிரேசிலிலிருந்து டேனி அல்வேஸ், நெய்மார் உள்ளனர்.

அர்ஜென்டீனாவிலிருந்து செர்ஜியோ அக்யேரோ, கேமரூன் அணியின் ஈட்டோ, இங்கிலாந்தின் வெய்ன் ரூனி ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.

10 பயிற்சியாளர்களையும் விருதுப் பட்டியலில் ஃபீபா அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்