விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறியதையடுத்து இந்திய, ரஷ்ய இரட்டையர் ஜோடியான சானியா மிர்சா, எலினா வெஸ்னீனா ஜோடி தரவரிசையில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
எலினாவுடனான ஜோடி கடந்த 4 மாதங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது குறிப்பாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், துபாயில் நாங்கள் ஆடத் தொடங்கியபோது இருவரும் இரண்டாம் பிடிப்போம் என்று யாராவது கூறியிருந்தால் நாங்கள் சிரித்திருப்போம் என்று சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக சானியா மிர்ஸா 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறார். பிறகு வாஷிங்டனில் நடைபெறும் ஜூலை 25ஆம் தேதி துவங்கும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்கிறார்.
இரட்டையரில் சிறப்பாக விளையாடி வருவதால் இதேபிரிவு தரநிலையில் சானியாவின் தனிப்பட்ட தரநிலை 11ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. ஆனால் ஒற்றையர் டென்னிஸில் சானியா 3 இடங்கள் சரிந்து 63ஆம் இடத்தில் உள்ளார்.
ஏ.டி.பி. தரவரிசைகளில் சோம்தேவ் தேவ் வர்மன் ஒற்றையரில் 63ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளார். இரட்டையரில் லியாண்டர் பயஸின் நிலையும் முதல் 10ற்குள் முன்னேற்றம் அடைந்துள்ளது.
பூபதி 5ஆம் இடத்தில் உள்ளார். ரோஹன் போபண்ணா 10ஆம் இடத்தில் உள்ளார்.