நான் சரியாக விளையாடவில்லை - சோம்தேவ்

புதன், 5 ஜனவரி 2011 (11:17 IST)
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பெல்ஜிய நாட்டு தகுதிச்சுற்று வீரர் டேவிட் காஃபினிடம் 2- 6, 4- 6 என்று தோல்வி தழுவிய இந்தியாவின் முதன்மை ஒற்றையர் நட்சத்திர வீரர் சோம்தேவ் தேவ் வர்மன் தான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்தார்.

"காஃபின் அபாரமாக விளையாடினார், நான் சரியாக விளையாடவில்லை. தோல்வி எனக்கு ஏமாற்றமளிக்கிறது ஏனெனில் நான் பயிற்சியின் போது சரியாகவே பந்துகளை அடித்து வந்தேன். இந்த சீசன் போக்கப்போக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்."

வலை அருகே வந்து காஃபின் ஆக்ரோஷ ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த சோம்தேவினால் சரியாக அதனை எதிர்கொள்ள முடியாமல் போனது.

வெப்துனியாவைப் படிக்கவும்