காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
சற்று முன் நடந்த அரையிறுதியில் ஆஸ்ட்ரேலியாவின் ஒலீவியா ரோகோவ்ஸ்கா என்பவரை 1-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று குறைந்தது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார் சானியா மிர்சா.
முன்னதாக சோம்தேவ் தேவ்வர்மன் ஆடவர் ஒற்றையர் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சோம்தேவ் இறுதியில் லுக்சாக்கை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சோம்தேவ், கிரெக் ஜோன்ஸ் என்பவருடன் இறுதியில் மோதுகிறார்.