மலேசியாவில் இன்று துவங்கும் 21 வயதுக்குட்பட்டோருக்கான 4 நாடுகள் இளையோர் ஹாக்கி போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும் மலேசியாவும் பலப்பரிட்சையில் ஈடுபடுகின்றனர்.
மற்ற அணிகள் பாகிஸ்தான், சிங்கப்பூர் ஆகும். ஜூனிஅர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் இங்கு நடைபெறுவதால் அதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த தொடர் நடத்தப்படுகிறது.
இந்திய அணியின் தலைவராக திவாகர் ராம் நியமிக்கப்பட்டுள்ளார். முதற் சுற்றுப்போட்டிகளில் பாகிஸ்தானையும் மலேசியாவையும் வீழ்த்துவது கடினம் என்று இந்திய அணிப் பயிற்சியாளர் பன்சல் தெரிவித்துள்ளார்.