பாரிஸ் ஓபன் டென்னிஸிலிருந்து ஷரபோவா விலகல்

வியாழன், 5 பிப்ரவரி 2009 (13:36 IST)
ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா காயம் காரணமாக பாரீஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

கடந்த அக்டோபரில் வலது தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ஷரபோவா. இதனால் ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் கடந்த ஆண்டு சாம்பியனான இவர் இம்முறை பங்கேற்க இயலாமல் போனது.

இதன் காரணமாக உலக மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ஜூலை 2004ற்கு பிறகு முதன் முதலாக 10ஆம் இடத்திலிருந்து பின்னடைவு கண்டுள்ளார்.

அடுத்த வாரம் துவங்கவுள்ள பாரீஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் உலக தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள ஆஸ்ட்ரேலிய ஓபன் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ், ரஷ்ய வீராங்கனை எலெனா டீமென்டீவா, பிரான்ஸ் வீராங்கனைகள் கார்னெட் மற்றும் அமேலி மௌரிஸ்மோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்