கத்தார் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீர்ர் ரஃபேல் நடாலும், சுவிஸ். வீரர் ரோஜர் ஃபெடரரும் முன்னேறியுள்ளனர்.
ஸ்லோவேகியா வீரர் கரோல் பெக் என்பவரை 61 நிமிடத்தில் 6- 1, 6- 2 என்ற செட் கணக்கில் ஊதித் தள்ளினார் ரஃபேல் நடால்.
இத்தாலி வீரரும் உலகத் தரவரிசையில் 34ஆம் இடத்திலும் உள்ள ஆன்ட்ரியஸ் செப்பியை சுவிஸ். வீரர் ரோஜர் ஃபெடரர் 6- 3, 6- 3 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதியில் ரஃபெல் நடால் பிரான்ஸ் வீரர் கேல் மான்ஃபில்ஸ் என்பவரையும், ஃபெடரர் ஜெர்மன் வீரர் பிலிப் கோல்ஷ்ரெய்பர் என்பவரையும் சந்திக்கின்றனர்.
காலிறுதியில் ஃபெடரர் வெற்றி பெற்றால் அவர் அரையிறுதியில் அவரது சமீபத்திய சவாலான பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரேயை மீண்டும் சந்திக்க நேரிடலாம்.