மாறினால்தான் முன்னேற்றம் : சார்ல்ஸ்வொர்த்!

வெள்ளி, 2 மே 2008 (16:17 IST)
இந்திய ஹாக்கி அணியின் ஆலசகராக பொறுப்பேற்றுள்ள ஆஸ்ட்ரேலிய முன்னாள் ஹாக்கி நட்சத்திர வீரர் ரிக் சார்ல்ஸ்வொர்த், ஹாக்கியை பொறுத்தவரை மாற்றங்களை விரும்பவில்லை என்றால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் விரயம்தான் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புத் தேர்வு செய்துள்ள 5 உறுப்பினர் ஹாக்கி தேர்வுக் குழு கூட்டதிற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய சார்ல்ஸ்வொர்த், "தற்போதய ஹாக்கி விளையாட்டிற்கு அனைத்து விதத்திலும் இன்றைய அணி பொருத்தமுடையதாயில்லை. ஹாக்கி விளையாட்டில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்ளவேண்டும், உலகின் முதல் 12 அணிகளின் பட்டியலில் நாம் இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும” என்றார்.

எனவே, முன்னேற்றம் பெற வேண்டுமென்றால் சரியான திட்டம் ஒன்றை வகுத்து கடினமாக பாடுபடவேண்டும், இப்போது செய்யப்படும் எதுவும் நடப்பு ஹாக்கி உத்திகளுக்கு ஏற்றவாறு இல்லை என்றார்.

"திறமையான வீரர்களையே பெற்றிருக்கிறோம் என்றும் அவர்களை ஓரளவிற்கு சரி செய்தால் போதுமானது என்ற நம்பிக்கைகள் இருந்து வருகின்றன, அது உண்மையில்லை என்று தோன்றுகிறது.

நம் வீரர்கள் அதிக திறன் படைதவர்களா அல்லது இல்லையா என்பதல்ல இப்போது கேள்வி. ஆனால் நிறைய வீரர்களும் திறமைகளும் இந்தியாவில் உள்ளன. இதனால் முன்னேற்றம் காண வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது.

இதற்காக நீக்கப்பட்ட சில வீரர்களையும் நாம் தேர்வுக்கு பரிசீலிக்கவேண்டும், மேலும் வளரும் இளம் திறமைகளையும் நெருக்கமாக கண்காணிக்கவேண்டும்.

சிறந்த வழிமுறைகள் இன்னமும் உள்ளன என்று இந்தியா நம்பாவிடில், ஒன்றும் செய்யமுடியாது, மாற விரும்பவில்லை எனில் இங்கு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை"

இவ்வாறு கூறியுள்ளார் ரிக் சார்ல்ஸ்வொர்த்.

வெப்துனியாவைப் படிக்கவும்