மரடோனா மீது பீலே கடும் தாக்கு!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (13:24 IST)
1991ஆம் ஆண்டு கொகெய்ன் போதை மருந்து எடுத்துக் கொண்டதாக, 1994ஆம் ஆண்டு ஸ்டெராய்ட்களை பயன்படுத்தியதாக தடை செய்யப்பட்ட அர்ஜென்டீன நட்சத்திரம் மரடோனாவின் சாதனைகளை பறிமுதல் செய்யவேன்டும் என்று பிரபல கால்பந்து நட்சத்திரம் பீலே கூறியுள்ளார்.

போதை மருந்து எடுத்துக் கொண்ட ஏமாற்றுக்காரரான மரடோனாவின் அனைத்துக் கால்பந்து சாதனைகளைக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் பீலே.

"ஒலிம்பிக் வீரர்கள் போதை மருந்து எடுத்துக் கொண்டது தெரிய வந்தால் அவர்களது பதக்கங்கள் பறிமுதல் செய்யப்படும்போது இவர் மட்டும் என்ன விதி விலக்கா? என்று பீலே கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரேசில் செய்தித் தாள் ஒன்றிற்கு பீலே அளித்த பேட்டியில் "மரடோனா ஒரு மகத்தான வீரர் ஆனால் அவர் சரியான கால்களால் உதைக்கவில்லை, தலையையும் பயன்படுத்தவில்லை, சுருக்கமாக, அவர் முழுமை எய்தவில்லை" என்று கூறியதாக தி சன் பத்திரிக்கை கூறுகிறது.

1950ம் ஆண்டுகளில் ரியால் மேட்ரிட் அணிக்கு விளையாடிய ஆல்ஃப்ரெடோ டி ஸ்டெஃபானோ மரடோனாவை விட மிகப்பெரிய ஆட்டக்காரர் என்று பீலே கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்