கடைசி 5 ஓவர்கள் 63; இலங்கை 274 ரன்கள் குவிப்பு

சனி, 2 ஏப்ரல் 2011 (18:54 IST)
PTI Photo
FILE
மும்பையில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை கடைசி 5 ஓவர்களில் 63 ரன்கள் குவித்து 211 ரன்களிலிருந்து 274 ரன்கள் சென்றனர். மகேலா ஜெயவதனே 103 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

45-வது ஓவருக்கு முன்பு அடுத்தடுத்து சமரவீராவையும், கபுகேதராவையும் இழந்த இலங்கை ஜெயவர்தனேயை நம்பியிருந்து. ஆனால் நுவான் குலசேகரா களமிறங்கி அவரும் மகேலாவும் 8 ஓவர்களில் 66 ரன்களைச் சேர்த்தனர்.

211 ரன்களை எடுத்த நிலையில் பேட்டிங் பவர் பிளே 46-வது ஓவரில் எடுக்கப்பட்டது. இதில் முதல் ஜாகீர் 13 ரன்களைக் கொடுக்க முனாஃப் படேல் 11 ரன்களைக் கொடுத்தார். அடுத்த ஜாகீர் ஓவரில் ஒரு அபார சிக்சர் உட்பட 17 ரன்கள் குவிக்கப்பட்டது. அதில் ஜாகீர்ன் ஒரு பந்தை கவர் திசையில் தூக்கி அடித்த மகேலா 85 பந்துகளில் சதம் எடுத்து உலகக் கோப்பை இறுதியில் சதம் எடுத்த இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையை எட்டினார்.

கடைசி ஓவரின் கடைசி பந்தை திசரா பெரேரா ஜாகீர் கான் பந்தை மிட் விக்கெட் திசையில் சிக்சர் அடிக்க இலங்கை 274 ரன்களைக் குவித்தது.

முன்னதாக இலங்கை அணி இருவருக்கிடையிலான பார்ட்னர்ஷிப்களை நன்றாக உருவாக்கியது.

தில்ஷான், சங்கக்காரா இடையே 43 ரன்கள், சங்கக்காரா ஜெயவர்தனே இடையே 62 ரன்கள் சமரவீரா, ஜெயவர்தனே இடையே 57 ரன்கள், ஜெயவர்தனே, குலசேகரா இடையே 8 ஓவர்களில் 66 ரன்கள் என்று ஆடியது கை கொடுத்தது. கடைசியில் திசரா பெரேரா 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

முன்னதாக சங்கக்காரா 48 ரன்கள் எடுத்து யுவ்ராஜிடம் ஆட்டமிழந்தார். குலசேகரா 32 ரன்களை எடுத்தார். சமரவீரா 21 ரன்களையுமஎடுத்தனர். முதல் 5 ஓவர்களில் 3 மைடன்களுடன் 6 ரன்கள் கொடுத்த ஜாகீர் கான் கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்தார். ஆனால் ஜெயவர்தனேயும், குலசேகராவும் எந்த விதமான காட்டுத்தனமான அடியையும் அடிக்கவில்லை அனைத்தும் கிரிக்கெட் ஷாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முனாஃப் படேல் முதல் 6 ஓவர்களில் 18 ரன்களைக்கொடுத்து கடைசி 3 ஓவர்களில் 23 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ஜெயவர்தனே ஒரு முனையில் எளிதான ரன்களை எடுத்தார். அதனை தோனி கட்டுப்படுத்த முயலவில்லை. மேலும் அவர் விக்கெட்டை வீழ்த்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அபாரமான இன்னிங்ஸ்.

இந்தியா களமிறங்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்