4வது ஒருநாள்: ஜிம்பாவே 144 ரன்களுக்குச் சுருண்டது!

வியாழன், 1 ஆகஸ்ட் 2013 (17:42 IST)
FILE
புலவாயோவில் நடைபெறும் இந்தியா, ஜிம்பாவே அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியப் பந்து வீச்சில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஜிம்பாவே 144 ரன்களுக்கு 43வது ஓவரில் சுருண்டது.

துவக்க வீரரான சிகந்தர் ரசாவை மோகித் சர்மா வீழ்த்தினார். அவர் 7 ரன்களில் வீழ்ந்தார். அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 16வது ஓவரில் 47/5 என்று ஆனது.

ஆனால் அடித்து வீழ்த்தவேண்டிய இந்தியப் பந்து வீச்சை சிகும்பராவும், வாலரும் சிறப்பாக எதிர்கொண்டு ஸ்கோரை 40வது ஓவரில் 127 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போது வாலர் 3பவுண்டரி ஒரு சிக்சருடன் 77 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் ஒரு அற்புதப் பந்தில் மோகித் சர்மா அவரை வீழ்த்தினார்.

சிகும்பரா மீண்டும் சிறப்பாக ஆடி 66 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். மிஷ்ரா 3 விக்கெட்டுகளையும் சரிவை உருவாக்கிய ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் மோகித் சர்மா 2 விக்கெட்டுகளையும் சாய்க்க ஷமி, உனட்கட் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்தியா இடைவேளைக்குப் பிறகு 4- 0 என்று முன்னிலை பெற களமிறங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்