அவருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அதிகபட்சம் 2 அல்லது 3 ஓவர்கள்தான் விளையாட முடிவதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார். முழங்கால் காயத்தால் அவதிப்படும் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை ஆர் சி பிக்கு எதிரான இன்றைய போட்டியே கூட தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இதுபற்றி பேசியுள்ள விராட் கோலி “நானும் தோனியும் இணைந்து விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்கலாம். நாங்கள் இருவரும் பல முறை இந்திய அணிக்காக இணைந்து விளையாடியுள்ளோம். தோனி கடைசி வரை நின்று பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அதனால் தோனியை கடைசியாக ஒருமுறை பார்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான தருணமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.