6 வது ஐ.பி.எல். போட்டிகள்: இன்று கொல்கொத்தாவில் கோலாகல துவக்க விழா

செவ்வாய், 2 ஏப்ரல் 2013 (12:14 IST)
FILE
20 ஓவர்களைக் கொண்ட ஐ.பி.எல். டி- 20 கிரிக்கெட் 2013ஆம் ஆண்டு நடைபெறும் போட்டிகளின் துவக்க விழா இன்று கொல்கத்தாவில் உள்ள "சால்ட் லேக்" மைதானத்தில் நடைபெறவுள்ளது.

9 அணிகள் பங்கேற்கும் 76 போட்டிகளைக் கொண்ட, 51 நாட்கள் நடக்கவுள்ள ஐ.பி.எல். டி- 20 கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா இன்று இரவு 7 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் மிகப் பெரிய மைதானமான "சால்ட் லேக்"ல் கோலாகலமாக துவங்கவுள்ளது.

ஐ.பி.எல் உலகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த துவக்க விழாவில், பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக் கானுடன் சேர்ந்து பாலிவுட் நடிகைகள் கத்ரீனா கைப் மற்றும் தீபிகா படுகோனும் நடனமாட உள்ளனர்.

நிகழ்சியின் முதலாவதாக, ஐ.பி.எல். கோப்பையை தாங்கி, ஒரு பிரம்மாண்டமான பலூன், மைதானத்தில் வந்து இறங்கவுள்ளது. மேலும் பிரபல அமெரிக்க ராப் இசைப் பாடகரான, 'பிட் புல்லின்' ஆடல் பாடல்களும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்சியில் பிரபல பாலிவுட் இசையமைப்பாளரான பிரித்தமின் இசைக்கு 300 பேர் கொண்ட குழு நடனமாடவுள்ளனர். சீனாவின் 'ரெட் பாப்பி' நடனப் பெண்களின் நடனமும், ஜிம்னாஸ்டிக் சாகசங்களும், டிரம்ஸ் இசைக் கலைஞர்களின் இசை நிகழ்சியும், லேச்ர் ஷோ நிகழ்சியும் நடைபெறவுள்ளது.

1 லட்சத்து 20 ஆயிரம் பேர் அமரும் அளவு கொண்ட சால்ட் லேக் மைதானத்தில், இந்நிகழ்சிகாக பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் ஷாருக் கானின் ரெட் சில்லி நிறுவனத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்