தென் ஆப்பிரிக்கப் பந்து வீச்சை எதிர்த்து போராடும் இலங்கை

வியாழன், 5 ஜனவரி 2012 (12:36 IST)
கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று இலங்கையின் வலியை தென் ஆப்பிரிக்க கேப்டன் 580/4 என்ற ஸ்கோரில் டிக்ளேர் செய்து முடிவுக்குக் கொண்டுவந்தார். இலங்கை தன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

சங்கக்காரா 35 ரன்களுடனும், ஜெயவர்தனே 7 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

முன்னதாக ஜாக் காலிஸ் 224 ரன்களை எடுக்க டிவிலியர்ஸ் அதிவேக 160 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

கடைசி 10 ஓவர்களில் ருடால்ஃபும், டிவிலியர்ஸும் 87 ரன்களைக் குவித்தனர். இலங்கை அணி முதல் இன்னிங்ஸைத் துவங்கியபோது சில பல எட்ஜ்களுக்குப் பிறகு தில்ஷான் தனது ஷாட்களை ஆடத் தொடங்கினார்.

திரிமன்னே நன்றாக விளையாடிவந்த போது மோர்னி மோர்கெல் அவரை தனது வேகத்தில் சாய்த்தார். 23 ரன்களில் திரிமன்னே பவுல்டு.

தில்ஷான் அபாரமாக சில ஷாட்களை விளையாடி 12 பவுண்டரிகளுடன் 78 ரன்களை 79 பந்துகளில் எடுத்திருந்தபோது இம்ரான் தாஹிர் சுழலில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சங்கக்காரா 6 பவுண்டரிகளுடன் அபாரமாக விளையாடி வருகிறார். அவர் 35 ரன்கள் எடுத்துள்ளார். ஜெயவர்தனே 7 ரன்கள் எடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்