சூதாட்டக்காரர் மஜீதை தெரியாது- ஹர்பஜன், யுவ்ராஜ் சிங்
செவ்வாய், 11 அக்டோபர் 2011 (18:21 IST)
FILE
லண்டன் கோர்ட்டில் பாகிஸ்தானின் தடை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களான சல்மான் பட், மொகமட் ஆமீர், மொகமட் ஆசிப் மீது விசாரணை நடந்து வருகிறது. அதில் சூதாடி மஷர் மஜீத், போலி வேடமிட்ட பத்திரிக்கையாளர் ஒருவரிடம் சூதாட்ட உரையாடல் செய்ததன் ஒலிப்பதிவை நீதிபதிக்கு போட்டுக் காண்பித்தனர்.
இதில் பல கிரிக்கெட் வீரர்களை வம்புக்கு இழுத்துவிட்டுள்ள மஜீத், இந்தியாவின் யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் தனக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியது தற்போது சர்ச்சைக்குரியதாகியுள்ளது.
இதனை ஹர்பஜனும், யுவ்ராஜ் சிங்கும் கடுமையாக மறுத்துள்ளனர். நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் பத்திரிக்கை நிருபர் சூதாட்டக்காரர் போல் வேடமிட்டு மஷர் மஜீதுடன் பேசிய உரையாடலில் மஜீத் குறிப்பிட்ட பெயர்கள் பல கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இந்த உரையாடல் லண்டன் நீதிபதி முன்பு போட்டுக் காண்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்ட்ரேலிய வீரர்களை வம்பிற்கு இழுத்து விட்ட மஜீத் அடுத்ததாக இந்திய வீரர்களான ஹர்பஜனையும் யுவ்ராஜையும் குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ப்கஜன் சிங் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
"யார் இந்த நபர் என்று தெரியவில்லை. நிச்சயம் இவருக்கு எதிராக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். அது சட்ட நடவடிக்கையா அல்லது வேறு நடவடிக்கையா என்பது பற்றி முடிவு செய்யவில்லை"என்றார் ஹர்பஜன் சிங்.
ஆனால் இவர் பெயரை நான் பி.சி.சி.ஐ. கவனத்திற்குக் கொண்டு செல்வேன், ஆட்டத்தைக் கெடுக்கும் இதுபோன்ற நபர்களை சும்ம விடலாகாது.
யுவ்ராஜ் சிங், யார் இந்த மஜீத்? அவரைப் பார்த்தது கிடையாது, அவர் கூறுவது படு குப்பை!
இந்தியாவில் என்ன பிரச்சனை என்றால் யாராவது சேவல் முட்டை போட்டது என்று கூறினால் அது உடனே செய்தியாகிவிடும். அது உண்மையா, பொய்யா என்பதெல்லாம் தெரியாது என்று யுவ்ராஜ் சிங் நையாண்டி செய்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள பி.சி.சி.ஐ. இது போன்று கூறும் அந்த மனித மரியாதைக்குரியவர் அல்ல எனவே இவர் கூறுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று ஒதுக்கி ஓரம் கட்டிவிட்டது.