ஒரு நாள் தொடரில் கம்பீர் இல்லை

வியாழன், 6 ஜனவரி 2011 (16:30 IST)
இந்தியாவின் இடது கை துவக்க வீரர் கௌதம் கம்பீர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக விலகினார்.

முதல் இன்னிங்ஸில் அவர் போராடி 93 ரன்களை எடுத்தபோது இடது கையில் அடிபட்டது. இதனால் அவர் ஃபீல்டிங்கிற்கு வரவில்லை.

இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது அவர் பேட்டிங் செய்தாலும் ஒருநாள் போட்டிகளுக்கு அவருக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

விரேந்திர சேவாகும் ஒருநாள் போட்டிகளில் இல்லை என்பதால் இந்திய அணிக்கு இது ஒரு பின்னடைவே.

வெப்துனியாவைப் படிக்கவும்