ஹர்பஜன் சிங் 4; தென் ஆப்பிரிக்கா 82/4

புதன், 5 ஜனவரி 2011 (14:56 IST)
கேப்டவுன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா பீட்டர்சன், அம்லா விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது.

இரண்டு விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் வீழ்த்தினார். பீட்டர்சன் 22 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன் சிங்கின் நன்றாகத் திரும்பிய பந்தை ஆட முயன்று பேடில் வாங்கி எல்.பி.டபிள்யூ. ஆனார்.

ஹஷிம் அம்லா 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று தோல்வியடைந்தார் பந்து ஸ்டம்ப்களை லேசாக அசைத்து பைலைக் கீழே தள்ளியது.

தற்போது காலிஸ் 23 ரன்களுடனும், டீவிலியர்ஸ் 7 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

ஹர்பஜன் சிங் 9 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்