சச்சினை வீழ்த்த ஆற்றலை வீணடிப்பதில் பயனில்லை - ஸ்டெய்ன்

புதன், 5 ஜனவரி 2011 (11:41 IST)
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வீசிய டேல் ஸ்டெய்ன் நேற்று ஆட்டம் முடிந்தவுடன் கூறுகையில், சச்சினை அவுட் செய்ய ஆற்றலை விரயம் செய்வதில் பயனில்லை. எதிர்முனை பேட்ஸ்மென்களை வீழ்த்துவதில் கவனம் செலுத்துவது சிறந்தது என்றார்.

கேப்டவுனில் நேற்று இரண்டாவது புதிய பந்து எடுத்தவுடன் அபாரமான வேகத்துடன் பந்துகளை நல்ல அளவில் குடை போல் ஸ்விங் செய்து அச்சுறுத்திய டேல் ஸ்டெய்ன், "சச்சின் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மென், அவருக்குப் பந்து வீசி ஆற்றலை விரயம் செய்வதில் பயனில்லை. ஆனால் ஒரு நல்ல பந்தை அவருக்கு வீசினாலும், 11ஆம் நிலை ஆட்டக்காரருக்கு வீசினாலும் நல்ல பந்து எப்போதும் நல்ல பந்துதான்." என்று கூறி டெண்டுல்கருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

நேற்று மேலும் ஒரு 5 விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சை நிகழ்த்தியுள்ள டேல் ஸ்டெய்ன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு மிகக்குறைந்த வெற்றி இலக்கை எட்டுவதிலும் மிகுந்த சிரமம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்