டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் ஐடியா செல்பேசி நிறுவனம் ஒப்பந்தம்
செவ்வாய், 9 பிப்ரவரி 2010 (16:07 IST)
ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் சாம்பியனான ஹைதராபாதின் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் விளம்பரதாரர்களாக ஐடியா செல்பேசி சேவை நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
வரவிருக்கும் ஐ.பி.எல். தொடர் முதல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் டெக்கான் சார்ஜர்ஸ் அணி வீரர்கள் முதல் உதவி அலுவலர்கள் வரை அனைவரும் ஐடியா நிறுவன லோகோவை தங்கள் உடைகளில் பொறித்துக் கொள்வது அவசியமாகிறது.