சௌரவ் கங்கூலிக்கு இன்று பிறந்த நாள்

புதன், 8 ஜூலை 2009 (16:22 IST)
இந்தியாவின் தலை சிறந்த கேப்டன் என்று வர்ணிக்கப்படும் சௌரவ் கங்கூலி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இன்றைய தினத்தில் அவர் ஒரு புதிய திட்டத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்.

வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு கங்கூலி போட்டியிடலாம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் "கொல்கட்டா இளவரசன்' என்று செல்லமாக அழைக்கப்படும் கங்கூலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கும் பரிந்துரை செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

அதாவது 2014ஆம் ஆண்டு கிழக்கு மண்டலத்தின் தலைவர் வேட்பாளராக கங்கூலி பெயர் பரிந்துரை செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இது பற்றி கங்கூலி கூறியதாக வங்காள செய்தித் தாளில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கங்கூலி உயர் மட்ட அளவில் இத்தனையாண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ளதால் இந்த புதிய பொறுப்பில் சிறப்பாக பணியாற்ற முடியும் என்று அவர் கூறியதாக தெரிகிறது.

ஆனால் எந்த ஒரு பதவிக்கும் தான் அவசரப்படப் போவதில்லை என்றும் கங்கூலி தெரிவித்ததாக அந்த பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்