கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்று வரும் இந்திய-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இருபதுக்கு 20 போட்டியில் சேவாக், சவுதீ பந்தில் அடுத்தடுத்து தொடர்ந்து 3 சிக்சர்களை விளாசி 5 பந்துகளில் 19 ரன்களுடன் உள்ளார்.
கம்பீர் 6 ரன்களில் ஓப்ரியன் பந்தில் ஆட்டமிழந்தார். சேவாக் தான் எதிர் கொண்ட முதல் 3 பந்துகளில் ஸ்கொயர் லெக், ஃபைன் லெக், மற்றும் மிட்விக்கெட் திசைகளில் 3 சிக்சர்களை விளாசினார்.