நாளை இலங்கை அணியுடன் தொடங்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் முதல் போட்டியை அடுத்து இந்திய அணித் தலைவர் எம்.எஸ்.தோனி கூறுகையில், இலங்கை அணியின் புதிர் பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் இந்த முறை பெரிய அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்களை கொழும்புவில் சந்தித்த எம்.எஸ்.தோனி, "கடந்த முறை இலங்கையுடன் டெஸ்ட் தோல்விகளுக்குப் பிறகு ஒரு நாள் தொடரில் அஜந்தா மென்டிஸ் வீச்சை சிறப்பாக எதிர்கொண்டுள்ளோம், இதனால் சவால்களுக்கு பேட்ஸ்மென்கள் தயாராக உள்ளனர்." என்றார்.
இந்த மைதானங்களில் பூவாதலையா வெல்வது முக்கியம் என்று கூறிய தோனி, கடந்த முறை பூவாதலையா வென்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது என்றார் தோனி.
ஹர்பஜன் சிங் காயம் காரணமாக இடம்பெறாதது ஒரு விதத்தில் வருத்தம் என்றாலும் இந்த வாய்ப்பை புதிய வீரர்கள் பயன்படுத்துவது அவசியம் என்று கூறினார் தோனி.
முதல் ஒரு நாள் போட்டி நாளை தாம்புல்லாவில் முழுதும் பகல் நேர ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்தப் போட்டித் தொடருக்கான தொலைக்காட்சி உரிமைகளை சிங்கப்பூரைச் சேர்ந்த நிம்பஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் பெற்றுள்ளது.